The Indian Institute of Management of Trichy (IIM) ஆனது Academic Associate பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் இப்பணி தொடர்பான கூடுதல் விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சி ஆனது Academic Associate பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்காக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க Ph.D. படித்தவர்களின் அதிகபட்ச வயது வரம்பு 35 எனவும், Ph.D. படிக்காதவர்களின் அதிகபட்ச வயது வரம்பு 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் B.A, B.Sc B.E /B.Tech, M.A, M.com MBA /PGDM, M.Phil /P.hd போன்ற படிப்புகளில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை மாதம் ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்
மேலே குறிப்பிட்டுள்ள தகுதிகளை பெற்ற விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் உள்ள படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இறுதிநாளுக்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.