கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் தற்போது Consultant பணிக்கு ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டுமே இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக இறுதி நாள் முடியும் முன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலைவாய்ப்பு:
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Consultant பணிக்கென ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்த பட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 50 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate பட்டம் முடித்திருக்க வேண்டும் மற்றும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் ரூ.25,000/- வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Consultant பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் நேர்முகத்தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரிக்கு பிப்ரவரி 13 ம் தேதிக்குள் தபால் அனுப்பி விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகின்றனர்.