Border Security Force ஆணையம் தற்போது HC (Veterinary) மற்றும் Constable (Kennel Man) போன்ற பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணிகளுக்கு 20 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BSF ஆணையம் வேலைவாய்ப்பு:
BSF ஆணையம், HC(Veterinary) பணிக்கு 18 காலியிடங்கள், Constable(Kennel Man) பணிக்கு 8 காலியிடங்கள் என்று மொத்தம் 26 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 06/03/2023 தேதியின் படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் HC(Veterinary) பணிக்கு 12 ம் வகுப்பு மற்றும் Veterinary Stock Assistant ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும் மற்றும் Constable (Kennel Man) பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பணி சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாத ஊதியம் HC(Veterinary) பணிக்கு ரூ.25,500/-முதல் ரூ.81,100/- வரையும், Constable (Kennel Man) பணிக்கு ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரையும் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் Written test, Documentation, Physical Standards Test, Physical Efficiency Test, Trade Test & Medical Examination மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். SC,ST, Female, Ex-service man and BSF விண்ணப்பதாரர்கள் தவிர மற்றவருக்கு விண்ணப்ப படிவ கட்டணமாக ரூ.100/- வசூலிக்கப்படும் மற்றும் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி மூலம் 06/03/2023 தேதிக்குள் விரைவாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.