Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research(JIPMER) நிறுவனமானது Research Assistant, Data Entry Operator பதவிக்கான 2 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பணி குறித்த கூடுதல் தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் .மேலும் இந்த பணிக்கு 31.01.2023 தேதி வரை மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும்.
வேலைவாய்ப்பு விவரங்கள் :
ஜவஹர்லால் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது(JIPMER) Research Assistant, Data Entry Operator பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த பதவிக்காக மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்த பட்சமாக 28 லிருந்து அதிகபட்சமாக 30 வரை உள்ள வயதினராக இருப்பது கட்டாயம்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கூடிய DOEACC ‘A’ நிலை பெற்றவர்களும் ,B.sc scinece படித்தவர்களும் ,பணி சார்ந்த படிப்புகளில் PG முடித்தவர்களுமாக இருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது..மேல் கூறிய தகுதிகளை பெற்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு அவர்களின் பணியின் அடிப்படையில் Research Assistant-க்கு ரூ.31,000 ,Data Entry Operator-க்கு ரூ.18,000 என மாத ஊதியமாக வழங்கப்படும்.
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Contract அடிப்படையில் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலே கூறிய தகுதிகளை பெற்ற நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பெற்று பூர்த்தி செய்து , icmrvte@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 31.01.20223 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.இறுதி நாளுக்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.