ICMR – National Institute for Research in Tuberculosis நிறுவனமானது Project Assistant, Project Technician III பதவிக்கான 2 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கா அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பணி குறித்த கூடுதல் விவரங்களை விரிவாக இந்த பதிவில் காணலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
ICMR – காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனமானது Project Assistant, Project Technician III பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த பதவிக்காக மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Technician III பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட Diploma in Medical Laboratory Technician-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Project Assistant பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் Graduate in Life Science/PG -ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் B.Sc படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் கூறிய தகுதிகளை பெற்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு அவர்களின் பணியின் அடிப்படையில் ரூ.31,000/ ரூ.18,000 என மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் நேர்காணல் முறை அல்லது எழுத்து தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலே கூறிய தகுதிகளை பெற்ற நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பெற்று பூர்த்தி செய்து,தகுந்த ஆவணங்களுடன் 09.02.2023 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்