பேங்க் ஆப் மஹாராஷ்ட்ரா தற்போது Economist ,Law Officer மற்றும் security officer உள்ளிட்ட பதவிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு 200க்கும் மேற்பட்ட காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பணி குறித்த கூடுதல் தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
பேங்க் ஆப் மஹாராஷ்ட்ரா வேலைவாய்ப்பு:
தற்போது பேங்க் ஆப் மஹாராஷ்டிரா Economist, Civil Engineer, Law Officer மற்றும் Security Officer உள்ளிட்ட பல பணிகளுக்கு 225 காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 38 வரை இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலை கழகங்களில் Master degree in Economics, Bachelor’s degree ,Civil Engineering, Bachelor in law degree, graduate degree, Electrical Engineering, Post degree, BE / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்கள் குறைந்தபட்சம் ரூ.48,170 முதல் ரூ. 78,230 ஊதியமாக பெறுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் Interview / Online Examination ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். SC/ ST / PWBD பிரிவினர் ரூ.100 விண்ணப்பக்கட்டணமாகவும் ,பிற பிரிவினர் ரூ .1000 விண்ணப்பக்கட்டணமாகவும் செலுத்தவேண்டும். இந்த பணிக்கு www.bankofmaharashtra.in என்ற இணையத்தளத்தில் 06.02.2023 தேதிக்குள் தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்