The Institute of Company Secretaries of India (ICSI) நிறுவனமானது Company Secretaries பதவிக்கான 4 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பணி குறித்த கூடுதல் விவரங்களை விரிவாக இந்த பதிவில் காணலாம்.மேலும் 30.01.2023 தேதி வரை மட்டுமே இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படும்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
இந்திய நிறுவன செயலாளர்கள் நிறுவனமானது (ICSI), Company Secretaries பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.. இந்த பதவிக்காக மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் Institute of Company Secretaries of India-ல் Associate member ஆகவும்,Post qualification -ல் 2 ஆண்டு அனுபவம் உள்ளவராகவும், CA (inter) CMA(inter) போன்ற தகுதிகளை பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். மேல் கூறிய தகுதிகளை பெற்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ஊதியம் ரூ.7.2 லட்சம் முதல் ரூ.8.4 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் நேர்காணல் முறை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலே கூறிய தகுதிகளை பெற்ற நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பெற்று பூர்த்தி செய்து placement@icsi.edu மின்னஞ்சல் முகவரிக்கு 30.01.2023 தேதிக்குள் அனுப்ப வேண்டும். இறுதி நாளுக்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.