இந்தோ திபெத்திய எல்லை காவல் படை (ITBP) Constable பணிக்கான ஆட்சேர்ப்புக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ITBP வேலைவாய்ப்பு:
தற்போது ITBP ஆணையம் Constable பணிக்கு காலியாக உள்ள 71 பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அறிவிப்பில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு பற்றி அறிய அதிகாரப்பூர்வ பக்கத்தை பார்வையிட்டு கொள்ளவும்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணி சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் Constable பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியம் ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
ITBP பணிக்கு தகுதியான நபர்கள் Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST) மற்றும் Written Test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். General, OBC, EWS விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப படிவ கட்டணம் ரூ.100/- வசூலிக்கப்படும் மற்றும் விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21/03/2023 என்ற தேதி முடியும் முன் விரைவாக ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.