இந்தியன் வங்கி ஆனது, தற்போது Specialist Officer பணிக்கு 200 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளதால் அதை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு:
தற்போது Specialist Officer பணிக்கென உள்ள 203 பணியிடங்களை நிரப்ப வேண்டி இந்தியன் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 40 வரை இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு தளர்வுக்கு அதிகாரப்பூர்வ பக்கத்தை காணவும்.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் CA , ICWA, Post Graduate, Graduation, B.Tech, B.E, M Tech, M.E ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் Scale I முதல் Scale IV (Rs.36,000/ – to Rs.89890/-) வரை அளிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Specialist Officer பணிக்கு தகுதியுடைய நபர்கள் Written Test மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப படிவ கட்டணமாக SC/ST/PWBD பிரிவினருக்கு ரூ.175/-, மற்றவர்களுக்கு ரூ.850/- வசூலிக்கப்படும் மற்றும் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 28/02/2023 தேதிக்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.