இந்திய ராணுவம் தற்போது Short Service Commission (SSC) பணிக்கென்று 180 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ராணுவத்தில் பணிபுரிய விரும்பும் நபர்கள் 09/02/2023 தேதிக்குள் விரைவாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகின்றனர்.
இந்திய ராணுவ வேலைவாய்ப்பு:
இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Short Service Commission (SSC) பணிக்கென்று 189 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக 20 முதல் அதிகபட்சம் 27 வயது இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் பாடப்பிரிவுகளில் B.E, B. Tech, Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியம் ரூ.56,100/- முதல் ரூ.2,50,000/- வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
SSC பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் Personal Interview மற்றும் Medical Examination மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட தகுதிகளை கொண்ட நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 09/02/2023 என்ற தேதிக்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.