இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் ( IRCTC ), Consultant பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விரைவாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
IRCTC வேலைவாய்ப்பு:
IRCTC நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிவிப்பின்படி, Consultant பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்போர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 65 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் மற்றும் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் மேற்கொண்டு விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Consultant பணிக்கு தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அலுவலக முகவரிக்கு 24/02/2023 என்ற தேதிக்குள் செல்லும்படி தபால் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.