கிழக்கு மத்திய ரயில்வே ஆணையம், General Duty Medicine Practitioners, Specialist Doctor போன்ற பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு என்று 4 காலியிடங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் பணி குறித்த தகவல்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
ரயில்வே வேலைவாய்ப்பு:
தற்போது General Duty Medicine Practitioners, Specialist Doctor பணிகளுக்காக நான்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக கிழக்கு மத்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 53 முதல் 67 வரை இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் MBBS, MD, DTCD, DNB, DM, DCH ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் மற்றும் இப்பணிகளுக்கென்று தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.75,000/- முதல் ரூ.1,05,000/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிகளுக்கு தகுதியுடைய நபர்கள் Contract அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் தபால் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.