சென்னையில் உள்ள தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (TNHRCE ) தற்போது Principal, Assistant Professor மற்றும் Junior Assistant/Typist போன்ற பதவிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பல்வேறு காலிப்பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது.
TNHRCE-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
TNHRCE கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை கல்லூரி நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பின் மூலம் Principal, Assistant Professor மற்றும் Junior Assistant/Typist போன்ற பதவிகளுக்கான காலியிடம் நிரப்பப்பட உள்ளது.
இந்நிலையில் Principal பணிக்கு Phd மற்றும் ஆசிரியராக 15 வருட அனுபவமும், Assistant Professor பணிக்கு SLET /NET /Phd, Junior Assistant/Typist பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு அவர்களின் பதவியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் இந்து மதத்தை சேர்ந்த நபர்கள் கல்வி சான்று, முன் அனுபவ சான்றின் மின் நகலின் சாப்ட் காப்பியை இணைத்து akascoffice2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 17.02.2023 என்ற தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.