இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில், Contingent Duty Medical Officers (CDMO) பணிக்கென்று பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
IOCL வேலைவாய்ப்பு:
IOCL நிறுவனத்தில், தற்போது Contingent Duty Medical Officers (CDMO) பணிக்கென பல்வேறு காலியிடங்கள் உள்ளதால் அதை நிரப்ப வேண்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ பக்கத்தை பார்வையிட்டு கொள்ளவும்.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் MBBS, MD, MS, Diploma, Post Graduate போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணியினை பொறுத்து ரூ.89,400/- முதல் ரூ.1,04,400/- வரை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
CDMO பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத்தேர்வின் மூலமாக நியமிக்கப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் நாளை (14/02/2023) நடக்கவிருக்கும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவிக்கப்படுகிறது.