பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் Junior Research Fellow (JRF) பணிக்கென்று காலியிடங்கள் உள்ளதால் அதை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பை DRDO வெளியிட்டுள்ளது. மேலும் பணி குறித்த கூடுதல் விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.
DRDO நிறுவன வேலைவாய்ப்பு:
DRDO நிறுவனம், தற்போது Junior Research Fellow (JRF) பணிக்கென 7 காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பானது அதிகபட்சமாக 28 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் B.E, B.Tech, M.Sc மற்றும் NET/ GATE ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ,31,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
JRF பணிக்கு தகுதியுடைய நபர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் DRDO ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.