Indigo நிறுவனத்தில் Assistant Manager பதவிக்கான பல்வேறு காலியிடங்கள் உள்ளதால் அவ்விடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பில் வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் தகுதிகளை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
Indigo வேலைவாய்ப்பு:
Indigo நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பில், Assistant Manager பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ பக்கத்தைப் பார்வையிடவும்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு சார்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் B. Com, BBA (Finance), B.Sc (Statistics/ Mathematics) ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் இப்பாடபிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. பணி சம்பந்தப்பட்ட துறையில் 4 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
Assistant Manager பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விரைவாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்படுகிறது.