கத்தோலிக்க சிரியன் வங்கி (CSB), சமீபத்தில் Lead Policy – Credit Cards பணிகளுக்கு 5 காலியிடங்கள் உள்ளதால் திறமையுள்ள மற்றும் ஆர்வமுள்ள நபர்களை கொண்டு நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு ஒன்றை CSB வங்கி வெளியிட்டுள்ளது.
CSB வங்கி வேலைவாய்ப்பு:
Lead Policy – Credit Cards பணிக்கென ஐந்து காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக CSB வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் MBA அல்லது CA முடித்திருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பிப்பவர்கள் பணியில் 10 முதல் 15 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. CSB வங்கி பணிக்கென தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Lead Policy பணிக்கு தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும், பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பெற்று, அதனை பூர்த்தி செய்து விரைவாக வரும் 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.