PESB ஆனது Indian Oil Corporation Limited-ல் Director (Research & Development) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதால் அதை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
IOCL நிறுவன வேலைவாய்ப்பு:
IOCL வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், Director (Research & Development) பணிக்கென பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது குறைந்த பட்சம் 45 என்றும், அதிகபட்சம் 60 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரிகளில் பணி சார்ந்த Engineering துறையில் Post Graduate டிகிரி முடித்திருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் Ph.D முடித்தவராக இருப்பின் முன்னுரிமை அளிக்கப்படும். Director பணிக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை ஆண்டு ஊதியமாக வழங்கப்படும் என்றும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலமாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான சான்றிதழ்களையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 02/05/2023 என்ற இறுதி தேதி முடிவதற்குள் தபால் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.