பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ( DRDO) ஆனது Research Associate (RA), Junior Research Fellowship (JRF) பணிகளுக்கு என ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதி மற்றும் திறமையுள்ள நபர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
DRDO நிறுவன வேலைவாய்ப்பு:
DRDO நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், Research Associate (RA), Junior Research Fellowship (JRF) ஆகிய பணிகளுக்கு என 04 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்ககளின் வயதானது பணியை பொறுத்து அதிகபட்சம் 28 அல்லது 35 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் SC / ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் மற்றும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் Ph.D, B.E, B.Tech, M.E, M.Tech ஆகிய பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு Research Associate பணிக்கு ரூ 54,000/- என்றும், Junior Research Fellowship பணிக்கு ரூ.31,000/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த DRDO நிறுவன பணிகளுக்கு தகுதியுடையவர்கள் Walk-In Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தகுந்த சான்றிதழ்கள் மற்றும் சுய விவர பட்டியலுடன் (Biodata) ஏப்ரல் மாதம் 5ம் மற்றும் 6ம் தேதிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தலைமை அலுவலக முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.