பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) இருந்து Project Engineer – I, Project Officer – I, Trainee Engineer – I பணிகளுக்கு பகுதிவாரியாக 30 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த BEL நிறுவன பணிகள் குறித்த கூடுதல் தகவல்கள் இப்பதிவில் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
BEL நிறுவன வேலைவாய்ப்பு:
தற்போது வெளியான அறிவிப்பில், Project Engineer – I, Project Officer – I, Trainee Engineer – I ஆகிய பணிகளுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள 30 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் அதிகபட்ச வயதானது பணியின் அடிப்படையில் 01/02/2023 அன்றைய தேதியின் படி, 28 அல்லது 32 ஆக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வயது வரம்பு தளர்வுகள் பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BE, B.Tech, B.Sc, MBA, MSW, PG Degree, PG Diploma ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். இந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாத ஊதியம் பணியின் அடிப்படையில் குறைந்த பட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.55,000/- வரை வழங்கப்பட உள்ளது.
இந்த BEL நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் Written Test, Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பத்தை ஆன்லைன் முறையில் 08/03/2023 என்ற இறுதி நாளுக்கு முன் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.