மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள CEPI ஆணையத்தில் Senior Consultant பணிக்கு என்று 7 காலிப்பணியிடங்கள் உள்ளது. இப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
CEPI வேலைவாய்ப்பு:
Senior Consultant பணிக்கென 7 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தற்போது வெளியான CEPI-யின் வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் அதிகபட்ச வயது வரம்பானது ஓய்வு பெற்றவர்களுக்கு 64 வயது என்றும், மற்றவர்களுக்கு 45 வயது என்றும் CEPI ஆணையத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த CEPI ஆணைய பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் துணை செயலாளர் அல்லது இயக்குனர் பணியில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்றும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாத ஊதியம் ஓய்வு பெற்றவர்களுக்கு முந்தைய பணியின் போது பெற்ற ஊதியத்தை பொருத்தும், மற்றவர்களுக்கு ரூ.78,000/- முதல் ரூ.1,18,500/- வரை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அலுவலக முகவரிக்கு 15/03/2023 என்ற இறுதி தேதிக்கு முன்னரே வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.