Indigo Airlines நிறுவனம், Ground Staff, Officer பணிக்கென்று பல்வேறு காலியிடங்கள் உள்ளதால் அதை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. டிகிரி முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Indigo Airlines வேலைவாய்ப்பு:
Indigo Airlines நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Ground Staff, Officer பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ பக்கத்தை பார்வையிட்டு தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட ஏதேனும் பாடப்பிரிவில் Graduate முடித்திருக்க வேண்டும் மற்றும் பணியில் 7 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Ground Staff பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து பிப்ரவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் குறிப்பிட்டுள்ள இடங்களில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.