இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கீழ் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம், Senior Research Fellow ( SRF) பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதால் அதை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பணி குறித்த கூடுதல் விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.
ICMR ஆணையம் வேலைவாய்ப்பு:
தற்போது Senior Research Fellow ( SRF) பணிக்கென காலியாக உள்ள இடங்களை நிரப்புவது குறித்து ICMR கீழ் உள்ள NIN ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பானது அதிகபட்சம் 35 ஆக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Masters in Nutrition தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. பணிக்கென தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியமாக அளிக்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
SRF பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, 27/02/2023 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.