பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Project Engineer – I, Trainee Engineer – I பணிக்கென பல்வேறு காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறவும்.
BEL நிறுவன வேலைவாய்ப்பு:
Project Engineer – I, Trainee Engineer – I பணிக்கென்று 50 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயதானது பணியை பொறுத்து அதிகபட்சம் 28 மற்றும் 32 வயது இருக்கவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரிகளில் B.E, B.Tech, B.Sc போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணிபுரியும் ஆண்டுகளின் அடிப்படையில் ரூ.30,000/- முதல் ரூ.55,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Engineer பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்ப படிவ கட்டணமாக Trainee Engineer பணிக்கு ரூ.150/- + GST மற்றும் Project Engineer பணிக்கு ரூ.400/- + GST வசூலிக்கப்படும் மற்றும் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து பிப்ரவரி 25 ம் தேதிக்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகின்றனர்.