இந்திய இரயில்வேயில் தற்போது Assistant Manager (Social) பதவிக்கான பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இரயில்வேயில் பணிபுரிய விரும்புவோர்கள் விரைவாக இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது.
இந்திய இரயில்வே வேலைவாய்ப்பு:
Assistant Manager (Social ) பதவிக்கு காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடத்தை நிரப்ப உள்ளதாக சமீபத்தில் இந்தியன் ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 45 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் Masters Degree in (Sociology, Social Science, any field of Social Science) ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணிக்கென்று தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 50000/- முதல் ரூ.160000/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Assistant Manager பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.