Amul வேலைவாய்ப்பு:
Amul நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், Account Assistant பணிக்கான பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பானது அதிகபட்சமாக 28க்குள் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் B.Com, M.Com, MBA, PGDM ஆகிய ஏதேனும் ஒரு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணியில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. பணிக்கென தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.4,50,000/- முதல் ரூ.4,75,000/- வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Account Assistant பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.