தொலைத்தொடர்பு துறையில் ( DOT) காலியாக உள்ள ஆலோசகர் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கென்று ஒரே ஒரு காலியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
DOT வேலைவாய்ப்பு:
தொலைத்தொடர்பு துறை, ஆலோசகர் பணிக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டும் இருப்பதாக அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது. மேலும் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10/02/2023 தேதிக்கு அதிகபட்சம் 65 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய, மாநில அரசு அல்லது அதற்கு சமமான நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும் மற்றும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அவர்களின் முன் அனுபவம் மற்றும் தகுதியை பொறுத்து ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசகர் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 04/03/2023 தேதிக்குள் தபால் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.