பேங்க் ஆப் பரோடா வங்கியில் Financial Literacy Counsellor, HR Analytics, Deputy Defence Banking Advisor & Defence Relationship உள்ளிட்ட பணிகளுக்காக உள்ள 10 காலியிடங்களை நிரப்பும்படி வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Bank Of Baroda வேலைவாய்ப்பு:
பேங்க் ஆப் பரோடா வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Financial Literacy Counsellor, HR Analytics, Deputy Defence Banking Advisor & Defence போன்ற பணிகளுக்கு 10 காலியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு குறைந்த பட்சம் 27 என்றும் அதிகபட்ச வயதானது 64 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் Bachelor Degree, Master’s Degree முடித்திருக்க வேண்டும் மற்றும் பணியில் குறைந்தது 5 முதல் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்த பணிக்கென தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் இப்பணிகளுக்கு தகுதியானவர்கள் Contract அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் முறையில் இறுதி தேதி வரும் முன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.