மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு துறை நிறுவனமான INDIAN OIL CORPORATION LIMITED நிறுவனத்தில் Dermatologist, Physician போன்ற பல மருத்துவ பதவிகளுக்கான பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
INDIAN OIL-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
Dermatologist, Physician, Orthopaedician, Pediatrics, Dentist போன்ற மருத்துவ பதவிகளுக்கான பல்வேறு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டு தகுந்த பணியாளர்களை தேர்ந்தெடுத்து INDIAN OIL CORPORATION LIMITED நிறுவனமானது பணி அமர்த்த உள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் MBBS உடன் PG டிகிரி (MD/DNB) மற்றும் மருத்துவ துறையில் 10 வருட அனுபவமும், Dentist பணிக்கு MDS உடன் 10 வருட மருத்துவ துறையில் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவர்களுக்கு 2 மணி நேரத்திற்கு ரூ.4,500 வீதம் ஊதியமாக வழங்கப்படுகிறது.
மேலும் INDIAN OIL CORPORATION LIMITED நிறுவனத்தின் மூலம் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு இப்பணிக்கு சரியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் 15.02.2023 ம் தேதியன்று பரௌனி சுத்திகரிப்பு மருத்துவமனை, பெகுசராய்-இல் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.