TNPSC தேர்வாணையமானது தற்போது Librarian and Information Officer, District Library Officer, Library Assistant போன்ற பல்வேறு பதவிக்களுக்கான 35 காலிப்பணியிடங்களை ஒதுக்கியுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TNPSC-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள 35 காலிப்பணியிடங்களில் College Librarian பணிக்கு 8 காலிப்பணியிடங்களும், Librarian and Information Officer பணிக்கு 1 காலிப்பணியிமும், District Library Officer பணிக்கு 3 காலிப்பணியிடமும், Library Assistant பணிக்கு 2 காலிப்பணியிடமும், Librarian and Information Assistant Grade II பணிக்கு 21 காலிப்பணியிடங்களும் ஒதுக்கப்பட்டு திறமை வாய்ந்த பணியாளர்கள் மூலம் காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது. மேலும் இப்பணிக்கு 01.07.2023 தேதியின்படி 32 முதல் 59 வயது வரை உள்ளவர்களே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ( SCs, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது).
இந்நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் B.sc / M.sc நூலக அறிவியல் அல்லது தகவல் அறிவியல் அல்லது ஆவண அறிவியலில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் College Librarian பணிக்கு ரூ.57,700 முதல் ரூ.2,11,500 வரை ஊதியமும், Librarian and Information Officer பணிக்கு ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை ஊதியமும், District Library Officer பணிக்கு ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை ஊதியமும், Library Assistant பணிக்கு ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை ஊதியமும், Librarian and Information Assistant Grade II பணிக்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை ஊதியமும் வழங்கப்படுகிறது.
மேலும் College Librarian, Librarian and Information Officer, District Library Officer போன்ற பணிக்கு நேர்காணல் மூலமாகவும், Library Assistant, Librarian and Information Assistant Grade II போன்ற பணிக்கு OMR /Computer Based Test (CBT) Method, Certificate Verification மூலமாகவும் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150 (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்), ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை. Interview & Non-Interview posts Note – ரூ. 200 விண்ணப்பக்கட்டணமும், Non-Interview posts only Note – ரூ.100 கட்டணமும் செலுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் 01.03.2023 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.