இந்திய தபால் அலுவலகம் தற்போது, GDS பணிக்கென இந்தியா முழுவதும் 40,889 பணியிடங்களும், அதில் தமிழ்நாட்டுக்கு 3,167 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியினை பற்றிய விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.
இந்திய தபால் ஆணையம் வேலைவாய்ப்பு:
இந்திய தபால் ஆணையம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் GDS பணிக்கு தமிழ்நாட்டில் 3,167 காலியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40-க்குள் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. வயது வரம்பு தளர்வு பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 ஆம் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் மற்றும் உள்ளூர் மொழி எழுத, படிக்க தெரிந்து வைத்திருத்தல் அவசியமாகும். பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.14,000/- சம்பளமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
GDS பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அவர்களின் கல்வித் தகுதியை பொறுத்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி மூலமாக வரும் ஐந்து நாட்களுக்குள் (16/02/2023) விரைவாக விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.