இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கீழ் இயங்கும் (NIE) தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில், Project Data Entry Operator பணிக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்புவது குறித்து ஆட்சேர்ப்பு அறிவிப்பு ஒன்றை NIE வெளியிட்டுள்ளது.
NIE நிறுவன வேலைவாய்ப்பு:
NIE நிறுவனம், Project Data Entry Operator பணிக்காக உள்ள 10 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 25 வயது நிரம்பியிருக்க வேண்டும் மற்றும் OBC பிரிவினருக்கு 3 வயது தளர்வும், SC பிரிவினருக்கு 5 வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, Knowledge of MS Excel, MS Word, MS PowerPoint, Good communication skills in English, Good documentation skills போன்ற திறன்களை கொண்டிருத்தல் நல்லது. இப்பணிக்கு நியமிக்கப்பட்டவர்களுக்கு மாத ஊதியம் ரூ.17,000/- வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Project Data Entry Operator பணிக்கு தகுதியுடையவர்கள் Personal Interview மற்றும் Written Test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 21/02/2023 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.