இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் கீழ் உள்ள இந்திய பருப்பு வகை ஆராய்ச்சி கழகமானது Project Associate-I, Senior Research Fellow, Young Professional II உள்ளிட்ட பணிகளுக்கென்று உள்ள இடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இந்திய வேளாண்மை ஆராய்ச்சி வேலைவாய்ப்பு:
Project Associate-I, Senior Research Fellow, Young Professional II போன்ற பணிகளுக்கு 3 காலியிடங்கள் உள்ளதாக இந்திய பருப்பு வகை ஆராய்ச்சி கழகம் அறிவிப்பில் கூறியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயதானது குறைந்தபட்சம் 21 என்றும், அதிகபட்சம் 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் M.Sc , Postgraduate in Agricultural Extension, Agricultural Economics, Agronomy with 4 or 5 years of Bachelor’s degree போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.31,000/- முதல் ரூ.35,000/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும் இப்பணிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் நேர்முகத்தேர்வின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் பிப்ரவரி 15,16 மற்றும் 17 தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.