Indian Institute of Information Technology Design & Manufacturing Kancheepuram நிறுவனம் Junior Research Fellow பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு ஒன்றை தற்சமயத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் பணி குறித்த கூடுதல் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
IIITDM வேலைவாய்ப்பு:
IIITDM நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Junior Research Fellow பணிக்கென்று ஒரே ஒரு காலியிடம் மட்டும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் பணி சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் BE, B.Tech, ME, M.Tech மற்றும் GATE போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணிக்கென தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.31,000/- முதல் ரூ. 35,000/- வரை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
JRF பணிக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் Online அல்லது Face to Face Interview மூலமாக நியமனம் செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் முறையில் 05/03/2023 தேதி முடிவதற்குள் அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.