பேங்க் ஆப் பரோடா வங்கி, Business Correspondent Supervisor பணிக்கான ஆட்சேர்ப்பு நியமன அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணிக்கென இரண்டு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு:
Business Correspondent Supervisor பணிக்கென இரண்டு காலியிடங்கள் இருப்பதால் ஆட்கள் சேர்ப்பது குறித்து பேங்க் ஆப் பரோடா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயதானது அதிகபட்சமாக 65 இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் M.Sc (IT), BE (IT), MCA மற்றும் MBA ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணி பிரிவின் அடிப்படையில் ரூ.12,000/- முதல் ரூ.15,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
BC Supervisor பணிக்கு தகுதியானவர்கள் Personal Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் அதிகாரப்பூர்வ முகவரிக்கு பிப்ரவரி 28 ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.