NIV வேலைவாய்ப்பு:
Project Technician III பணிக்கென நான்கு காலியிடங்கள் உள்ளதால் அவ்விடங்களை நிரப்ப NIV அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயதானது பணியை பொறுத்து அதிகபட்சம் 28 மற்றும் 30 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிலையங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, Diploma in Medical Laboratory Technician, M.Sc (Life Sciences /Microbiology/ Biotechnology) ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் பணிக்கென தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணியை பொறுத்து ரூ.18,000/- வரை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Project Technician III பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 03/03/2023 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.