பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட், Medical Officer AYUSH, Pharmacist, Jr. Physiotherapist, Technician பணிகளுக்காக உள்ள காலியிடங்களை தகுதியான நபர்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
BECIL நிறுவன வேலைவாய்ப்பு:
BECIL நிறுவனத்தில் Medical Officer AYUSH, Pharmacist, Jr. Physiotherapist, Technician பணிகளுக்கென்று ஒதுக்கப்பட்டு உள்ள 159 காலியிடங்களை நிரப்ப BECIL ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் B.E, B.Tech, Degree, Post-graduate degree, Diploma போன்ற படிப்புகளில் பணிக்கு தொடர்புடைய ஒன்றில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.13,290/- முதல் ரூ.56,100/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
BECIL நிறுவன பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வின் மூலமாக நியமிக்கப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 07/03/2023 என்ற இறுதி தேதி முடிவதற்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.