UGC வேலைவாய்ப்பு:
UGC வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், Director பணிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பானது அதிகபட்சம் 65 ஆக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் IUCAA Director ஆக 10 ஆண்டுகள் பணி புரிந்தவர்களாக இருக்கவேண்டும் மற்றும் Director பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ.2,10,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
UGC பணிக்கு தகுதியுடைய நபர்கள் நேர்முகத்தேர்வின் மூலமாக நியமனம் செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31/03/2023 தேதி முடிவதற்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.