The Institute of Cost Accountants of India (ICMAI) நிறுவனத்தில் Senior Management Consultant, Middle Management Consultant, Junior Management Consultant, Operational Support, Research Assistants ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ICMAI வேலைவாய்ப்பு:
ICMAI நிறுவனம் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், Senior Management Consultant, Middle Management Consultant, Junior Management Consultant மற்றும் Operational Support (IT/ERP/SAP), Research Assistants ஆகிய பணிகளுக்கு என 21 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு பணியின் அடிப்படையில் குறைந்தபட்சமாக 25 என்றும், அதிகபட்சமாக 65 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் Post Graduate, CMA, CA, CS, MBA, CPA அல்லது அதற்கு சமமான ஒன்றில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை பணி சார்ந்த துறைகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். இப்பணிகளுக்கென தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியம் அவர்களின் முன் அனுபவம் மற்றும் திறன் அடிப்படையில் வழங்கப்படும்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணல் முறையில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட தகுதிகளை கொண்ட நபர்கள் தங்களது சுயவிவர பட்டியலை hr1@icmai.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (08.03.2023) அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.