The Ministry of Environment, Forests and Climate Change (MOEFCC) ஆணையத்தில் Consultant பணிக்கென 03 பணியிடங்கள் காலியாக இருப்பதால் அவ்விடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மத்திய அரசு வேலைவாய்ப்பு:
MOEFCC ஆணையத்தில் Environmental Accounts and Economics, Statistical Analyst, Sustainable Development Consultant ஆகிய துறைகளில் காலியாக உள்ள Consultant பணிக்கு என 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் அதிகபட்ச வயது வரம்பு 01/01/2023 என்ற தேதியின் படி, 40 வயது அல்லது 45 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduate Degree, B.Tech, Master Degree அல்லது Ph.D முடித்திருக்க வேண்டும் என்றும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணிக்கென தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.80,000/- முதல் ரூ.1,00,000/- வரை மாத ஊதியமாக அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Consultant பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து போதிய சான்றிதழ்களுடன் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் வந்து சேருமாறு அனுப்பி விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.