கெயில் லிமிடெட் நிறுவனம் தற்போது மருத்துவ அதிகாரி பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. எனவே இந்த பணிக்கு தகுதியுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
கெயில் நிறுவன வேலைவாய்ப்பு:
கெயில் நிறுவனம் மருத்துவ அதிகாரி பணிக்கென ஒரே ஒரு காலியிடம் மட்டுமே இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது இந்திய மருத்துவ கவுன்சில் சார்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று மாத தொழில்துறை ஆரோக்கியத்தில் பயிற்சி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.93,000/- வழங்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவ அதிகாரி பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து அலுவலக முகவரிக்கு தகுந்த சான்றிதழ்களுடன் அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் தபால் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.