இந்திய ஊழியர்களின் மாநில காப்பீடு திட்ட நிறுவனமானது (ESIC ) தற்போது Senior Resident, Obstetrics & Genecology, Biochemistry/ Pathology/ Microbiology, General Medicine, General Surgery போன்ற பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ESIC வேலைவாய்ப்பு:
ESIC நிறுவனத்தில் காலியாக உள்ள 6 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக, தற்போது இந்த நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் Senior Resident, Obstetrics & Gynaecology, Biochemistry/ Pathology/ Microbiology, General Medicine, General Surgery போன்ற பதவிகளில் பணியாற்ற திறமை வாய்ந்த ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. SC / ST / OBC / Ex-servicemen போன்ற பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வயது வரம்புகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் MBBS/ PG Degree / Diploma போன்ற பணி சார்ந்த படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ESIC நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.67,700 ஊதியமாக வழங்கப்படுகிறது.
இந்த பணிக்கு ESIC நிறுவனத்தால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வின் மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். மேற்கூறிய தகுதிகளை பெற்ற ஆர்வம் உள்ள நபர்கள் அதிகாரபூர்வ பக்கத்தின் மூலம் படிவத்தை பெற்று பூர்த்தி செய்த பின்பு, தகுந்த ஆவணங்களுடன் 16.02.2023 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.