IIT Madras வேலைவாய்ப்பு :
ஐஐடி மெட்ராஸ் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Senior Executive, Assistant Manager உள்ளிட்ட பணிகளுக்கு 4 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பை பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும். மேலும் விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் B.Com, M.Com, MBA, Any graduation with inter CA அல்லது CMA , CS, ICWA போன்ற ஏதேனும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பணிகளின் அடிப்படையில் ரூ.17,000/- முதல் ரூ.1,00,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பணிகளுக்கு தகுதியுள்ள நபர்கள் Verification, Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 09.02.2023 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.