ESIC ஆணையம், Senior Residents பணிக்காக காலியிடங்கள் இருப்பதால் அதை நிரப்ப அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ESIC ஆணையத்தின் வேலைவாய்ப்பு:
பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம்(ESIC) வெளியிட்டுள்ள அறிவிப்பில், Senior Residents பணிக்கென்று 9 காலியிடங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு 31/01/2023 தேதிக்கு 40 வயது மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் MBBS with PG அல்லது MD, DNB மற்றும் பணி சார்ந்த துறையில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் ரூ.1,27,141/- என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Senior Residents பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15/03/2023 நாள் வரை புதன்கிழமைகளில் நடைபெறும் நேர்காணலுக்கு போதிய ஆவணங்களுடன் சென்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.