TNPSC வேலைவாய்ப்பு:
தற்போது Overseer, Junior Draughting Officer, Junior Draughting Officer ( Highway), Junior Draughting Officer (Public Works), Draughtsman, Grade – III, Foreman, Grade-II ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் Overseer / Junior Draughting Officer பணிக்கு 794 காலியிடங்களும், Junior Draughting Officer ( Highway) பணிக்கு 236 பணியிடங்களும், Junior Draughting Officer (Public Works) பணிக்கு 18 காலியிடங்களும், Draughtsman, Grade – III பணிகளுக்கு 10 பணியிடங்களும், Foreman, Grade-II பணிகளுக்கு 25 பணியிடங்களும் என்று மொத்தம் 1083 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 32 முதல் 37 க்குள் இருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரிகளில் Diploma in Civil Engineering, Diploma in Mechanical Engineering, B.E, Mechanical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் Overseer மற்றும் Junior Draughting Officer பணிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.35400/- முதல் அதிகபட்சம் ரூ.130400/- வரையும், Foreman, Grade-II பணிகளுக்கு குறைந்த பட்சம் ரூ.ரூ.19500/- முதல் அதிகபட்சம் ரூ.71900/- வரையும் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்த பணிகளுக்கு தகுதி வாய்ந்தவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு பதிவு கட்டணம் கிடையாது.புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.150/- மற்றும் எழுத்து தேர்வுக்கான கட்டணம் ரூ.100/- ஆகும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 04/03/2023 தேதி முடிவதற்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.