டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் Field manager, Field Coordinator, Agro Associate உள்ளிட்ட பணிகளுக்கு உள்ள காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணிகளுக்கு நான்கு காலியிடங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DIC வேலைவாய்ப்பு:
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Field manager, Field Coordinator, Agro Associate போன்ற பணிகளுக்கு 4 காலியிடங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
மேலும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் M.Sc (Hortic) / M.Sc (Agri) / M.V.S.C / M.F.S.C/ B.Sc (Hortic /Agri), B.V.S.C / B.F.S.C ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்த பணிகளுக்கென தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் ரூ.9,500/- முதல் ரூ.31,500/- வரை வழங்கப்பட உள்ளனர்.
DIC நிறுவனத்தின் வேலைக்கு தகுதியானவர்கள் 27/02/2023 அன்று நடைபெறும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் DIC நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து chfdeanpsg@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 23/02/2023 தேதிக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.