BOB Financial நிறுவனம், தற்போது VP / AVP – IT Infrastructure என்ற பணிக்கென்று பல்வேறு காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள நபர்கள் விரைவாக இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்படுகிறது.
BOB பைனான்சியல் வேலைவாய்ப்பு:
VP / AVP – IT Infrastructure பணிக்கென காலியாக உள்ள இடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் Graduate, Post Graduate, Professional Qualification முடித்திருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்தது 8 முதல் 12 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்பவர்களுக்கு பணிக்கேற்ப நல்ல ஊதியம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
BOB பைனான்சியல் நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் கல்வி தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் நியமிக்க உள்ளனர். மேற்கண்ட தகுதிகளை கொண்ட விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் 28/02/2023 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.