பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Field Assistant, Project Associate – I பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக பணிகளுக்கான முழு விவரங்களை கீழ்கண்ட பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு:
Field Assistant, Project Associate – I பணிகளுக்கென்று இரண்டு காலியிடங்கள் இருப்பதாக சமீபத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருந்தது. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு பற்றிய விவரங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை கண்டு அறிந்து கொள்ளலாம்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு சார்ந்த கல்லூரிகளில் MSc (Marine Science / Marine Biotechnology / Microbiology / Life Science / Earth & Environmental Science) ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிகளுக்கென்று தேர்வு செய்பவர்களுக்கு மாத ஊதியம் Project Associate-I பணிக்கு ரூ.25,000/- மற்றும் Field Assistant பணிக்கு ரூ.18,000/- அளிக்கப்பட உள்ளனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழக பணிக்கு தகுதியானவர்கள் Personal Interview மூலமாக நியமிக்கப்பட உள்ளனர். மேற்கண்ட தகுதிகளை கொண்ட விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தகுந்த சான்றிதழ்களுடன் விரைவாக நாளைக்குள்(21/02/2023) அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.