CSB வங்கி வேலைவாய்ப்பு:
Sales Manager பணிக்கு காலியாக உள்ள இரண்டு காலியிடங்களை நிரப்ப CSB வங்கியானது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணி சார்ந்த துறையில் Degree முடித்திருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் பணியில் 2 முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. Sales Manager பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
CSB வங்கி பணிக்கு தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேற்கண்ட தகுதிகளை கொண்ட நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 31/12/2023 தேதி முடிவதற்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.