தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், Guest Faculty பணிக்கான காலியிடங்கள் நிரப்புவது குறித்து அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அறிவிப்பில் இப்பணிக்கென ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டுமே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இப்பணி குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மத்திய பல்கலைக்கழக வேலைவாய்ப்பு:
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், Guest Faculty பணிக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டும் உள்ளதாக தெரிவித்துள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பில் இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 70 என்று அறிவித்துள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் Master Degree In EPH அல்லது PHd In EPH முடித்திருக்க வேண்டும் மற்றும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு வகுப்புக்கு ரூ.1500 என்று ரூ.50,000 வரை மாத ஊதியம் அளிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Guest Faculty பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள் நேர்முகத்தேர்வின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 07/02/2023 ம் தேதி முடிவதற்குள் விரைவாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.